சந்தை எண்ணியதை போல உயர்வுகளுடன் தொடங்கியது... 5029 என்கிற புள்ளியை நான் திரையில் கண்டவுடன் உணர்ந்தது என்னவென்றால், கடந்த வெள்ளிகிழமை ஐரோப்பிய சந்தைகள் கொடுத்த 2 .5% உயர்வை இன்று நம் சந்தை கண்டிப்பாக தரபோகிறது என்பதே...5072 என்கிற அதிகபட்ச புள்ளிகள் என்பது வெள்ளி அன்று முடிவடைந்த நிலையில் இருந்து 2 .65 % சதவித உயர்வு என்பதே....
11 .00 மணி அளவில் குறைந்த பட்ச நிலையான 4990 என்பதை அறிந்த போது சற்றே கலக்கம் கொண்டாலும் சந்தை புள்ளிகள் கண்டிப்பாக 5000 மேலே முடியும் என்பதை நம்பினேன்... இன்றைய upswing என்பது 4993 என்பதில் இருந்து 5037 என்பதை அடைய எடுத்து கொண்ட நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே..... அதன் பிறகு உணர்ந்த விஷயம் என்னவென்றால் சந்தை கண்டிப்பாக இன்றைய நிலையில் 5000 என்பதற்கு மேலே தான் முடியும்என்பது....
தின வர்த்தகத்தில் நான் என்றும் எதிர்பார்ப்பது அந்த upswing அல்லது downswing ... இந்த இரண்டில் ஒன்று சந்தை முடியும் நேரமான 3 .10 மணிக்கு முன்பு எதாவது ஒரு நேரத்தில் நடக்கிறது. இந்த upswing அல்லது downswing எனபது குறைந்த பட்சம் 40 புள்ளில்என்பது திண்ணம்....
கடந்த வெள்ளி அன்று வாங்கிவைத்த 2 நிபிட்டி 25feb2009 லாட் இன்று அதிகபட்சமான புள்ளியில் (5078 ) விற்றுவிட்டு கணிணியை சாத்திவிட்டு நடையை கட்டினேன்.... இன்றைய லாபம் (5078 - 4860 -10 =208 X 100 = 20800 ) என்று என்னும்போது எனக்கு மகிழ்ச்சியே....
(மேலே சொன்ன வர்த்தகத்திற்கு ஆதாரம் வேண்டுவோர் மட்டும் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்)
நாளைய பங்கு சந்தை முன்னோட்ட பதிவை கலை 10 மணிக்கு முன்பாக எதிர் பாருங்கள்...
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக