திங்கள், 30 நவம்பர், 2009

நிப்டி இன்று 01 .12 .2009 :-

வலதுகை சந்தைகள்: (சீனா, சிங்கப்பூர், கொரியா, தைவான், இந்தோனேசிய மற்றும் ஜப்பான் சந்தைகள்)

30.11.2009 அன்று வலதுகை சந்தைகள் எல்லாம் குறைந்தபட்சம் 2.5% சதவித உயர்வுடன் முடிந்து உள்ளது. மேலும் இன்று (1.12.2009)காலை 9.30 வரை அவைகள் பச்சையில் தொடங்கி உள்ளது. எனவே நல்லதே நடக்கும் என்பதை மனதில் நிறுத்தி இன்றைய சந்தையை பார்போம்.

இடதுகை சந்தைகள்: ( ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் அனைத்தும்)

ஐரோப்பிய சந்தைகள் சிவப்பில் தொடங்கி இன்று (30 .11 .2009) பச்சையில் முடிந்து உள்ளது. அமெரிக்க சந்தை சிவப்பில் தொடங்கி இன்று (30 .11 .2009)பச்சையில் முடிந்து உள்ளது (கிட்டத்தட்ட ப்ளாட்டாக).

நம்மநாட்டு சந்தை:

மேற்கண்ட புள்ளிகளின் ஏற்ற இறக்கங்களையும், நேற்று மாலை முடிந்த இந்திய பங்குசந்தையையும் வைத்து பார்த்தால், இன்று நிப்டி கண்டிப்பாக 4980 - 5000 புள்ளிகளில் தொடங்கும்... பிற்பகல் வர்த்தகம் மற்றும் பிற காரணிகளை கொண்டும், மற்ற சந்தைகளை அடிப்படையாக வைத்தும் நாம் பார்த்தால் கண்டிப்பாக நிப்டி 5100 என்கிற புள்ளிக்கு அருகே முடிய வாய்ப்பு உள்ளது... ஏற்கனவே சொன்னது போல சந்தை 5200 என்கிற புள்ளியை அடைந்து பின்பு profit booking என்னும் பாடம் கற்கவைக்கும். (பல பேரை பழிவாங்கி நொந்து நூடூல்ஸ் ஆக்கி.

குறுந்தொலைவில் (25.02.2010) சந்தை கண்டிப்பாக 5200 புள்ளியை எட்டும் என்பது உறுதி. எனவே இன்று நிப்டி 25feb2010 ஒரு லட் மட்டும் 5000 - 5025 என்ற விலைக்குள் வங்கி வைக்கவும். (DEC: B001)

(மேற்கண்ட அறிவுறுத்தல் என்னிடம் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் என்னுடைய தினகுறிப்புகளை வைத்து பயனடையவேண்டும் என்றால் என்னிடம் பதிவு செய்த அன்பர்களிடம் சில முன்நிபந்தனைகளை சொல்லி உள்ளேன். அதன் படி நடந்தால் ஒழிய கண்டிப்பாக பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தயவு கூர்ந்து அவைகளை அறிந்து மேற்கண்ட அறிவுறுத்தலை பின் பற்றவும்)

நன்றிகளுடன்
யுகே

இடையில் வரவிருக்கும் பதிவுகள்:

பங்குச்சந்தை ஆத்திசூடி
(ரூ. 2 லட்சம்) பணம் பத்து(லட்ச)ம் செய்யும்
பங்குச்சந்தை படகுபயண கதை
1 திமிங்கலம் = 1000 சின்ன மீன்கள் (ஈசியா சின்ன மீன் பிடிக்கலாம் வாங்க)
100 shares to hold before you die

கருத்துகள் இல்லை: