நான் ஏற்கனவே ஊகித்தது போல பங்குச்சந்தை ஓட்டத்தை முடிவு செய்யும் அன்பர்கள் தங்கள் பங்குகளின் சராசரி விலையினை குறைக்கும் பொருட்டு சந்தையை 5000 - 5100 அளவில் வைத்து இருந்தனர். பின்பு உலக சந்தையின் போக்கிற்க்கு ஏற்ப சந்தை நிலையை எடுக்க 4801 என்ற அளவிற்கு கிழே கொண்டு வந்தனர்.
எந்தவித காரணமும் இன்றி 26 மற்றும் 27 தேதிகளில் 5100 என்ற நிலையில் இருந்து 4801 என்கிற நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த இறக்கம் சந்தை விளையாட்டு முதலைகளின் விருப்பம் இல்லாமல் நடந்தது. தற்போது இதன் முலம் நான் உணர்த்துவது என்னவென்றால்... சந்தையை மீண்டும் 5100 -5200 என்கிற நிலைக்கு கொண்டு சென்று அல்லது 5250 என்கிற புதிய உச்சத்தை அடைந்து தங்கள் லாபத்தை புக் செய்துகொள்ள உள்ளார்கள். வரும் வாரத்தில் அதாவது 4 தேதி டிசெம்பர் அன்று சந்தை புதிய உச்சத்தை தொட ஏதுவாக தினம் 50 புள்ளிகள் உயர்த்தி 5100 - 5200 என்கிற புள்ளிகளில் நிலை கொள்ள வைப்பார்கள் என்பது திண்ணம்.
தின வர்த்தக குறிப்பு மற்றும் எதிபர்ப்புகளை நாளை முதல் (1 Dec 2009 ) புதிய மாதத்தில் தொடங்குகிறேன்...
உங்கள் யோசைனைகள் வரவேற்கபடுகிறது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக