வணக்கம் அன்பர்களே
புதிய சிந்தனைகள், புதிய முயற்சி, புதிய முன்னெடுப்பு மற்றும் புதிய செயல்கள் இவை யாவும் தமிழர்களின் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.
அந்த வரிசையில் இன்று நான் ஒரு புதிய முன் முயற்சியாக இந்த பதிவினை தொடங்கி உள்ளேன். இந்த வலை பூவின் விளைவு விருப்பங்கள் பின் வருமாறு...
1 தமிழில் ஒரு நல்ல வலைபூ பங்கு சந்தை குறித்தும் அதன் தின நடவடிக்கை குறித்தும் வெளியீடுகள் தரவேண்டும்.
2 வாரம் ஒரு முறை அந்த வார பங்குசந்தையின் ஓட்டம் மற்றும் வரும் வாரங்களில் நிகழவிருக்கும் கணிப்புகள் பற்றியும் கருத்து வெளியீடு தரும் வலைபூவாக இருக்க வேண்டும்.
3 நான் அறிந்ததை பிறருக்கு பகிர்ந்தும் என் சந்தேகங்கள் பிறர் போக்கவும் ஒரு தளமாகவும் இருக்க வேண்டியும் இதை தொடங்கி உள்ளேன்..
உங்களுடைய மேலான அதரவு வேண்டியும் கருத்து பரிமாற்றம் வேண்டியும் இனிதே தொடங்குகிறேன்...
ஒன்றே செய்.. அதுவும் நன்றே செய், இன்றே செய் இன்றும் இன்னே செய்...
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக