வலது கை சந்தைகள் - சீன, கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் மற்றும் தைவான்.
1 .12 .2009 அன்று அனைத்து சந்தைகளும் நல்ல முன்னேற்றத்தை காண்பித்து உள்ளன. பொதுவாக இன்று சந்தை எந்தவித நெகடிவ் விசயமும் இல்லாமல் நன்கு முன்னேற்றம் கண்டு உள்ளன. இந்த போக்கு வரும் நாட்களில் தொடரும் என்று சொல்லுகிறார்கள். 2.12.2009 அன்று பச்சையில் தொடங்கி 9.30 மணி அளவில் 1.5% முன்னேற்றம் கொண்டு உள்ளது.
இடது கை சந்தைகள்.
1 .12.2009 அன்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இன்று நல்ல முன்னேற்றத்தை கொண்டு உள்ளன. அவை புதிய நிலை நோக்கி செல்லும் என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் வலுவாக உள்ளது. அதே போல அமெரிக்க சந்தைகள் 1.12.2009 அன்றைய வர்த்தகத்தை பச்சையில் தொடங்கி கிட்டதட்ட 1.5% சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது.
நம்ம நட்டு சந்தை
நான் ஏற்கனவே சொன்னது போல நேற்று (1.12 .2009 ) சந்தை 5100 என்கிற நிலையினை கடந்து 5122 என்ற புள்ளியில் முடிந்து உள்ளது. 1.12 .2009 நடை பெற்ற வர்த்தகத்தில் நேற்று நான் குறிபிட்டது போல upswing மற்றும் downswing இரண்டும் குறுகிய நேரத்தில் நடைபெற வில்லை. இதன் பொருளானது சந்தை தன்னுடைய குறிக்கோளை தெளிவாக கொண்டு உள்ளது. 5180 என்கிற முந்தைய 52 வார உச்ச நிலையினை உடைத்து எறிந்து காளை 5250 என்கிற நிலையின அடையபோவது என்னவோ உண்மை.
நிற்க (அதாவது நிறுத்தி படிக்க), தற்போது ஏற்கனவே சொன்னது போல (DEC: B001) என்கிற என்னுடைய நேற்றைய யோசனைப்படி வாங்கப்பட்ட 25FEB2010 நிப்டி ஒரு லாட் நாளை காலை (2.12 .2009) சந்தை தொடங்கிய உடன் 5150 (DEC: S001) என்கிற நிலையினில் விற்குமாறு கோருகிறேன். இதன் பிறகு சந்தையின் நடவடிக்கையினை கவனிக்கும்மாறு கோருகிறேன்.
எந்த நிமிடத்தில் 5150 க்கு அந்த லாட் விற்கபடுகிறதோ அதன் பிறகு மாலை 3 மணி அளவில் சந்தை 5175 என்கிற புள்ளியினை கடந்து இருக்குமானால் மட்டும் கண்டிப்பாக 25FEB2010 நிப்டி இரண்டு லாட் சந்தையில் (DEC : S002) விற்று வைக்குமாறு கேட்டு கொள்ளுகிறேன்.
சந்தை கண்டிப்பாக 5180 என்ற புள்ளியை இந்தவார இறுதிக்குள் உடைக்கபோவது உறுதி.
(நேற்றைய சந்தையில் துபாய் பேங்க் விவகாரம் ஒரு இம்பக்ட் ஏற்படுத்த முடியவில்லை. இதுவே சந்தை கீழே இறங்க காரணம் தேடி கொண்டு இருந்து இருந்தால் கண்டிப்பாக சந்தை 1 .12.2009 அன்று 4950 என்கிற புள்ளியில் முடிந்து இருக்கும்.)
2.12.2009 அன்று 5150 என்னும் நிலைக்கு மேலே தொடங்கி 5200 என்கிற புள்ளியை தொடபோவது உறுதி.
(மேற்கண்ட அறிவுறுத்தல் என்னிடம் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் என்னுடைய தினகுறிப்புகளை வைத்து பயனடையவேண்டும் என்றால் என்னிடம் பதிவு செய்த அன்பர்களிடம் சில முன்நிபந்தனைகளை சொல்லி உள்ளேன். அதன் படி நடந்தால் ஒழிய கண்டிப்பாக பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தயவு கூர்ந்து அவைகளை அறிந்து மேற்கண்ட அறிவுறுத்தலை பின் பற்றவும். தொடர்புக்கு raisingvalue@in.com)
யோசனைகளும் மாற்று கருத்துகளும் வரவேற்க படுகின்றன.
நன்றிகளுடன்
யுகே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக