வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
21.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் குறைவில் முடிந்து உள்ளது.
22.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் பச்சையில் தொடங்கி உள்ளது. மேலும் சந்தைகள் அனைத்தும் இன்று நல்ல நிலையில் தொடங்கி உள்ளது. இது ஒரு நல்ல எதிர்பார்ப்பை தந்து உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
21.12.2009 அன்று நல்ல நிலையில் தொடங்கி இறுதியில் 1% உயர்வில் முடிந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாலர்க்கு நிகரான யூரோவின் மதிப்பு குறைந்து உள்ளதே காரணம்.
நிப்டி இன்று 22.12.2009
நிப்டி இன்று கண்டிப்பாக 4939 என்கிற புள்ளியை விட்டு விலகி 5000 என்கிற புள்ளியை நோக்கி செல்ல அதிக வாய்ப்பு. இந்த நிலை எற்பட உலக சந்தைகள் அனைத்தும் ஒரு அளவு நன்கு உயர்ந்து வியாபாரம் புரிவதும் ஒரு காரணம் ஆகும்.
இன்றைய நிலையில் 5000 என்கிற தடையை தாண்டி மேலே சென்றால் 5050 என்கிற புள்ளியை கடக்க எளிதான வாய்ப்பு அமையும். இது தவிர நிறுவனங்கள் கட்டி உள்ள அட்வான்ஸ் டேக்ஸ் போன்ற காரணங்களும் இதை ஊக்குவிக்கலாம்.
சொல்ல முடியாது, இந்த நிலையில் இருந்து 4900 என்கிற புள்ளியை தொட்டு சில சேர்ப்பு (Consolidation) நிலையினை அடைந்து பிறகு 5000 என்கிற புள்ளியை நாளை தொடவும் வாய்ப்பு அதிகம். ஏன் என்றால், எப்போதுமே, அமெரிக்க சந்தைகள் முன்னேற்றம் அடைந்த அடுத்த நாள் தான் இந்திய சந்தைகள் அதை பின்பற்றும். அதன் படி நடந்தால், நாளை கூட அந்த 5000 என்கிற புள்ளியை நாம் அடையலாம்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
4950 - 4968 - 4999 - 5011 - 4988 - 5025
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.
பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக