திங்கள், 14 டிசம்பர், 2009

நீங்கள் கைகொள்ள வேண்டிய 100 பங்குகள்…….

அன்பர்களே,


நேரிலும், கைபேசியிலும் மற்றும் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தியும், விசாரித்தும், என்னை ஊக்குவித்தும், திட்டங்களில் இணைந்தும், சந்தேகங்கள் கேட்டும், நன்றி பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி! நன்றி!! நன்றி!!!.

ஜனவரி முதல் வாரம் தொடங்கி, வாரம் இரண்டு நிறுவனத்தின் பங்குகள் பரிந்துரைக்காலம் என்று உள்ளேன். இந்த பங்குகள் எல்லாம் நீங்கள் எந்த அளவு முடியுமோ அந்த அளவு வாங்கி வைக்கவும். ஆனால் குறைந்தது ரூ. 5000/- க்கு நான் குறிப்பிடும் நிறுவனத்தின் பங்குகள் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கி வைக்கவும். இது எதிர்கால பாதுக்காப்புக்கு என்று எண்ணி வாங்கி வைக்கவும். வருடம் 10 நிறுவனத்தின் பங்குகள் விதம் ஒரு பத்து வருடத்தில் நீங்கள் வாங்கும் பங்குகளின் மதிப்பு ரூ.5,00,000/-

அதிகபட்சம் ரூ. 5000 X 10 நிறுவன பங்குகள் X 10 வருடம் = ரூ.5,00,000/-)

பத்தாவது வருட முடிவில் நீங்கள் வைத்து இருக்கும் பங்குகளின் மதிப்பு குறைந்தது ரூ. 15,00,000/- இருக்கும்.

2010 ஜனவரி முதல் வாரம் ஆரம்பித்து 2 பங்குகள் விதம் 50 வாரங்களுக்கு, 100 நிறுவனத்தின் பங்குகள் பரிந்துரைக்க உள்ளேன். இந்த பங்குகள் அனைத்தும் முடிந்த அளவு ரூ.100/- க்குள் இருக்குமாறு பார்த்துகொள்ளுகிறேன்.

இந்த வாராவார பதிவிற்கு நான் வைத்து இருக்கும் தலைப்புதான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது…….

நீங்கள் இறப்பதற்க்கு முன் கைகொள்ள வேண்டிய 100 நிறுவனத்தின் பங்குகள்.


100 COMPANY SHARES TO HOLD BEFORE YOU DIE

நன்றிகளுடன்

யுகே

கருத்துகள் இல்லை: