வியாழன், 3 டிசம்பர், 2009

நிப்டி இன்று 3.12.2009

வலது கை சந்தைகள் - சீன, கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் மற்றும் தைவான்.

2.12.2009 அன்று அனைத்து சந்தைகளும் குறைந்தது அரை சதவிதம் முதல் ஒரு சதவிதம் வரை முன்னேற்றம் கண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அதன் எதிரொலி இந்திய சந்தைகளிலும் தெரியும். 3.12.2009 அன்று பச்சையில் தொடங்கி 9.30 மணி அளவில் 1 % குறைவான முன்னேற்றம் கொண்டு உள்ளது.

இடது கை சந்தைகள் - ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்.

2.12.2009 அன்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் சிறிதளவு சிவப்பை கொண்டு தொடங்கி உள்ளது. ஐரோப்பிய சந்தையின் நிலை பண்டிகைக்காலம் நெருங்கும் பொது ஏற்படகூடிய பண புழக்க அதிகரிப்பு மற்றும் சம்பள உயர்வு, புது வருட பொருள் வாங்குதல் உள்ளிட்ட காரணங்களால் இப்போது உள்ள நிலையில் இருந்து குறைந்தது 3% முன்னே செல்லும். அதே போல அமெரிக்க சந்தைகள் 2.12.2009 அன்றைய வர்த்தகத்தை பச்சையில் தொடங்கி ப்ளட்டாக முடிந்து உள்ளது.

நம்ம நட்டு சந்தை

நான் ஏற்கனவே சொன்னது போல நேற்று (2.12 .2009 ) சந்தை நான் குறிப்பிட்ட மாதிரி மீண்டும் உயர்வினை அடைந்தாலும் முந்தைய 52 வார உச்சநிலையினை உடைக்க மிகவும் திணறுகிறது. ஒளிந்திருந்து கரடி தாக்கிவிடுமோ என்கிற பயம் காளையிடம் தெரிகிறது. கரடியை FIIs , DIIs மற்றும் Mutual Fund கம்பனிகள் கூண்டில் அடைத்து சாவியை பத்திரமாக தொலைத்து விட்டு chrismats கொண்டாட்டம், புது வருட கொண்டாட போய்விட்டார்கள் என்பது தெரியவில்லை. இதன் காரணமாக தான் நேற்று பங்கு விலை குறியிட்டு கிராப் செத்துவிடபோகும் கிழவனின் ரத்த ஓட்டம் போல் இல்லாமல் accident அடிபட்ட இளைஞனின் ரத்த ஓட்டம் காட்டும் monitor (அந்த monitor இல்லைங்க) திரை போல இருந்தது.

தற்போது ஏற்கனவே சொன்னது போல (DEC: B001) என்கிற என்னுடைய நேற்றைய யோசனைப்படி வாங்கப்பட்ட 25FEB2010 நிப்டி ஒரு லாட் 2.12 .2009 சந்தை தொடங்கிய உடன் 5150 (DEC: S001 - 02.12.2009 11 .28 மற்றும் 14 .04 மணி அளவில்) என்கிற நிலையினில் விற்று இருந்தீர்கள் என்றால் உங்கள் லாபம் பின்வருமாறு. 5150 - 5050 = 100 X 50 = 5000/-.

சந்தை 5175 என்கிற நிலைக்கு மேலே செல்லாததால் நேற்று சொன்ன DEC : S002 என்கிற அட்வைஸ் செயல் பட்டு இருக்க வாய்ப்பு இல்லை.

எனவே இன்றைய நிலையில் கையில் எந்தவிதமான லாட்டும் இல்லை.

3.12.2009 அன்று 5100 என்னும் நிலைக்கு கீழே தொடங்கி 5150 - 5200 என்கிற புள்ளிகளில் சந்தை முடிய வாய்ப்புக்கள் அதிகம்.
5075 - 5110 என்கிற எந்த நிலையில் வேண்டுமானாலும் 25FEB2010 இரண்டு லாட் வாங்கி வைக்கவும். DEC : B002.

இதுவரை Strike ஆன Advice Code : DEC : S001, DEC : S001
இதுவரை Strike ஆகாத Advice Code : DEC S002

(மேற்கண்ட அறிவுறுத்தல் என்னிடம் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் என்னுடைய தினகுறிப்புகளை வைத்து பயனடையவேண்டும் என்றால் என்னிடம் பதிவு செய்த அன்பர்களிடம் சில முன்நிபந்தனைகளை சொல்லி உள்ளேன். அதன் படி நடந்தால் ஒழிய கண்டிப்பாக பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தயவு கூர்ந்து அவைகளை அறிந்து மேற்கண்ட அறிவுறுத்தலை பின் பற்றவும். முன்நிபந்தனைகளை தெரிந்து கொள்ள தொடர்புக்கு raisingvalue@in.com)

யோசனைகளும் மாற்று கருத்துகளும் வரவேற்க படுகின்றன.
நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: