வலது கை சந்தைகள் - சீன, கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் மற்றும் தைவான்.
3.12.2009 அன்று அனைத்து சந்தைகளும் குறைந்தது ஒரு சதவிதம் முதல் 1.5 சதவிதம் வரை முன்னேற்றம் கண்டு உள்ளது. 4.12.2009 அன்று தொடங்கி 9.30 மணி அளவில் ஒரு சதவிதம் தாழ்வு கொண்டு உள்ளது உள்ளது.
இடது கை சந்தைகள் - ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்.
3.12.2009 அன்று ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் சிறிதளவு கொண்டு தொடங்கி உள்ளது. ஐரோப்பிய சந்தைகள் தொடக்கம் பச்சை முடிவு ஒரு சதவிதம் தாழ்வு. அதே போல அமெரிக்க சந்தைகள் 3.12.2009 அன்றைய வர்த்தகத்தை பச்சையில் தொடங்கி கிட்டதட்ட ஒரு சதவிதம் குறைவாக முடிந்து உள்ளது.
மேற்கண்ட சந்தைகளில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த விசயமும் பெருசாக இல்லை.
நம்ம நாட்டுசந்தை:-
இந்திய பங்குசந்தையின் போக்கு தற்போது யாருக்கும் புரிபடாமல் உள்ளது. இன்று நடைபெற்ற ஒரு upswing மற்றும் அனுமார் வால் போன்ற ஒரு downswing நான் என்றும் காணாத ஒன்றாகும். என்னுடைய எண்ணம் இது தான், உள்காரணிகள் சந்தை முந்தைய நிலையான 5180 என்பதை உடைக்க முழு மூச்சுடன் இருந்தாலும் வெளிகாரணிகள், அதாவது அமெரிக்க சந்தை மற்றும் ஐரோப்பிய மற்றும் பிற ஆசிய சந்தைகள் நம்முடைய வேகத்திற்கு வரத்தயாராக இல்லாததே இதற்கு முக்கிய கரணம் ஆகும். உள்நாட்டில் சந்தையை உயர்த்த எதாவது ஒரு முக்கிய காரணத்திற்காக சந்தை காத்து இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு விதமாக நம்முடைய வியூகத்தை வைத்து கொள்ளுவோம், ஒன்று சந்தை கண்டிப்பாக முந்தைய அதிகபட்ச நிலையான 5180 என்பதை உடைத்து மேலே செல்லும்.அதனால் ஒரு 5120 -5150 புள்ளிகளில் இரண்டு லாட் வாங்கி 5250 என்கிற நிலையில் விற்று விட்டு நடையைகட்டுவோம். எப்படி இருபினும் சந்தை உச்சபட்ச நிலை அடைந்த பிறகு ஒரு மிக பெரிய correction தரும். குறைந்தது 5 முதல் 8 சதவித correction. (நிப்டியில் சொல்லுவது என்றால் 250 முதல் 400 புள்ளிகள்) அப்போது விற்று வைத்து correction முடிந்த உடன் வாங்கி கொள்ளலாம். இரண்டாவது, ஒண்ணும் வேண்டாம் சாமி சந்தை முதலில் இந்த முந்தைய உச்ச நிலை உடைக்கட்டும் அப்பறம் பார்க்கலாம் என்பது. இதில் முதல் நிலை எடுப்பவர் மட்டும் தொர்ந்து படிக்கவும்... மற்றவர் நான் முதல்நிலையில் சொல்லுவது நடக்கிறதா என்று பார்க்கவும்.
தற்போது ஏற்கனவே சொன்னது போல (DEC: B002) என்கிற என்னுடைய நேற்றைய யோசனைப்படி நீங்கள் 25feb2010 நிப்டி இரண்டு லாட் வாங்கி இருந்தால் இன்று காலை (4.12.2009 ) அன்று சந்தை தொடங்கியவுடன் 5180 (DEC : S003) என்கிற விலையில் விற்க ஆர்டர் போடவும்.
மேலே சொன்னது நடந்தால் மட்டுமே பின்வரும் பரிந்துரையை படிக்கவும். மறுபடியும் மாலை 3.00 மணிக்கு மேலே நிப்டி 5175 என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே, அல்லது மூன்று மணிக்கு முன்னால் எப்போது சந்தை 5220 கடந்து இருந்தால் மட்டும் நிப்டி 25FEB2010 இரண்டு லாட் வாங்கவும் (DEC : B003). இந்த பரிந்துரை நடை பெற்றால் நீங்கள் வாங்கிய புள்ளியில் இருந்து 50 புள்ளிகள் அதிகமாக அப்போதே விற்க ஆர்டர் செய்யவும். புரியவில்லையா மேலே சொன்ன மேற்கண்ட இரண்டு நிலைகளும் 5180 என்கிற சூட்சம புள்ளியில் உள்ளது.
மேலே சொன்ன இரண்டும் நடைபெற்றால் 4 .12 .2009 அன்று இறுதியில் 25FEB2010 லாட் இரண்டு இருக்கும் அல்லது சந்தை 2270 மேலே முடிந்து இருந்தால் ஒரு லாட்டும் கையில் இருக்காது. அந்த நிலையில் நிகர லாபம் ரூ.7000/- ஒரு வேளை முதலில் சொன்னது மட்டும் நடந்து இருந்தால் இன்றைய குறைந்தபட்ச லாபம் ரூ.2500/- மற்றும் 25feb2010 இரண்டு லாட் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
(இரண்டு, மூன்று அன்பர்கள் நான் சொல்லும் பரிந்துரைகள் புரியவில்லை என்று சொல்லி உள்ளார்கள், அவர்களுக்கு என்னுடைய அறிவிப்பு என்னவென்றால் வரும் திங்கள் (7.12.2009) முதல் என்னிடம் பதிவு செய்யும் அன்பர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் excel ஷீட்டில் அனைத்து பரிந்துரைகளும் ஆங்கிலத்திலும் தர உள்ளேன்*. இது தவிர எங்களுடைய கட்டண சேவை திட்டங்களும் திங்கள் அன்று அறிவிக்கபடுகிறது).
(மேற்கண்ட அறிவுறுத்தல் என்னிடம் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் என்னுடைய தினகுறிப்புகளை வைத்து பயனடையவேண்டும் என்றால் என்னிடம் பதிவு செய்த அன்பர்களிடம் சில முன் நிபந்தனைகளை சொல்லி உள்ளேன். அதன் படி நடந்தால் ஒழிய கண்டிப்பாக பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தயவு கூர்ந்து அவைகளை அறிந்து மேற்கண்ட அறிவுறுத்தலை பின் பற்றவும்.
முன்நிபந்தனைகளை தெரிந்து கொள்ள தொடர்புக்கு:- raisingvalue@in.கம)
யோசனைகளும் மாற்று கருத்துகளும் வரவேற்க படுகின்றன.
நன்றிகளுடன்
யுகே
* இலவசமாக குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக