வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
22.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது.
23.12.2009 அன்று – காலை 8.30 மணி அளவில் பச்சையில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
22.12.2009 அன்று நல்ல நிலையில் தொடங்கி இறுதியில் 1% உயர்வில் முடிந்து உள்ளது. நேற்று உயர்வு எதனால் ஏற்பட்டது என்றால், அங்கு வீடுகள் விற்பனை சூப்பராம். (இதையே காரணம் காட்டி போன வருடம் விலையை குறைத்தார்கள்)
நிப்டி இன்று 23.12.2009
4985 என்கிற புள்ளி நேற்று நாம் எதிர்பார்த்த புள்ளியான 5050 என்கிற புள்ளியை விட்டு வெகுதூரம் உள்ளது. இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் வெகு நல்ல முன்னேற்றம் கண்டு உயர்வில் வியாபாரம் புரிந்துகொண்டு இருப்பது நமக்கு நல்ல சாதகம்.
இது தவிர அமெரிக்க சந்தைகள் அனைத்தும் பச்சையில் முடிந்து உள்ளது நம்க்கு நல்ல சூழ்நிலையினை தந்துள்ளது. உள்நாட்டு காரணிகள் அணைத்தும் கடந்த 15 நாட்களாக நன்கு உள்ளது, அமெரிக்க சந்தைகள் சிறிது தடுமாற்றம் கொண்டதால் வந்த வினைதான் 5150 என்கிற புள்ளியில் இருந்து 4950 என்கிற
நிலை. புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அமெரிக்க சந்தையை மெதுவாக நகர்த்துகிறது.
லாங் பொசிசன் எடுத்தவர்கள் தயவுகூர்ந்து பொறுமை காக்கவும். சேர்ப்பு நிலையினை நமது சந்தை கடந்துவிட்டதா என்று இன்று தெரியும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5005 - 5018 - 5061 - 5075 - 5080 - 5060
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.
பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக