செவ்வாய், 5 ஜனவரி, 2010

நிப்டி இன்று 05.01.2010

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

4.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.

05.01.2010 இன்று – காலை 8.30 மணி அளவில் நன்கு பச்சையில் தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

4.1.2010 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் 1.5% சதவிதம் உயர்ந்து முடிந்து உள்ளது.

நிப்டி இன்று 05.01.2010

இன்றைய நிலையில் சந்தை 5300 என்கிற புள்ளியை நோக்கி விரைந்துசெல்லுகிறது. தொடர்ந்து 3 நாட்களாக சந்தை உயர்வில் முடிவது சிறிது அச்சத்தையும், சற்றே தயக்கத்தையும் தருகிறது.இன்றைய நிலையில் நாம் சிறிது பொறுத்து இந்த தறிக்கெட்டு மேல் நோக்கி ஓடும் சந்தை சற்று ஆசுவாசபடும் வரை வெளியில் இருந்து கவனிப்பது நல்லது. எனவே சற்று நிதானமாக நிலைகளை எடுக்கவும்.

SHORT  போவதுதான் இப்போதைய நிலையில் நல்லது. 5300 என்கிற புள்ளிக்கு மேலே 25FEB2010 ஒரு லாட் விற்று வைக்கவும்.

கணிணி தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும், சந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நேரத்தில் பிற பணிகள் இருப்பதாலும் இன்னும் சில நாட்களுக்கு பதிவுகள் தினமும் காலை 10 மணிக்குள் பதிவிடப்படும். இந்த சிறு சிரம நிலை சரியாகும்வரை பொறுத்தருள்க.....

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5250 - 5275 - 5299 - 5279 - 5262 - 5247 - 5275

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி: மேலே பறக்கிறது எனவே கவனமாக நிலைகள் எடுக்கவும். சாட் பொசிசன் எடுக்கவும்.

பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.

யோசனைகளும் மாற்று கருத்துக்களும் வரவேற்க்கபடுகிறது.

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: