நிப்டி இன்று 14.1.2010
வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
13.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு குறைந்து முடிந்து உள்ளது. ஆசிய சந்தைகள் தங்களுடைய புதிய உச்ச நிலையினை நோக்கி செல்ல தயாராக உள்ளது. நேற்றைய இறக்கம் என்பது ஒரு விதமான தயக்கம்தான்.
14.1.2010 இன்று – காலை 8.30 மணி அளவில் அனைத்தும் நன்கு முன்னேற ஏதுவாக பச்சையில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
13.1.2010 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் மிக குறைவாக உயர்ந்து முடிந்து உள்ளது.
நிப்டி இன்று 14.01.2010
முதலில் நேற்றைய பதிவு வெளியிட முடியாததற்க்கு மன்னிக்கவும்.
நேற்று சந்தை ஆரம்பித்த முதல் கிழ் நோக்கியே சென்று கொண்டு இருந்தது, மதியம் 1.30 மணிக்கு மேல் உயர்வு கண்டது யாரும் எதிர்பாராதது.
நேற்றைய நிலையில் 5170 என்கிற நிலையில் சாட் பொசிசன் எடுத்தவர்கள் கண்டிப்பாக கைகொள்ள வேண்டியது ஒன்றுதான், அது பொறுமை பொறுமை.
இன்றைக்கு சந்தை உயர்வில் தொடங்கியதொடுயில்லாமல் 52 வார முந்தைய உச்ச நிலையினை கடக்க எதுவாக விரைகின்றது.
அமெரிக்க சந்தைகள் புதிய உச்ச நிலையினை தினமும் தொடுகிறது. இது இந்திய சந்தையின் போக்கை பெரிதும் பாதிக்க செய்கிறது. நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு வியாபாரம் மற்றும் லாப குறிப்புகள் வெளியாகி உள்ளன... இவை இன்றைய சந்தையை கண்டிப்பாக 5250 புள்ளிக்கு மேலே நிறுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5267 - 5275 - 5252 - 5243 - 5232 - 5249 (close)
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி: மேலே பறக்கிறது எனவே கவனமாக நிலைகள் எடுக்கவும். சாட் பொசிசன் எடுக்கவும்.
பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.
அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... தமிழர்களின் இன்றைய மிச்ச அடையாளம் பொங்கல் திருநாள் மட்டுமே.... எனவே முடிந்தவரை நம் வருங்கால செல்வங்களுக்கு பொங்கல் திருநாளின் மேன்மைகளையும், பெருமைகளையும் சொல்லி தாருங்கள்....
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக