வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
11.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்ந்து முடிந்து உள்ளது. ஆசிய சந்தைகள் தங்களுடைய புதிய உச்ச நிலையினை நோக்கி செல்ல தயாராக சேர்ப்பு நிலைகளை கடந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.
ஜப்பான் மற்றும் ஹாங்காங் சந்தைகளை கடந்த ஒரு மாதமாக பார்த்தவர்கள் இதை நன்கு அறிவார்கள்..... 10600 என்கிற புள்ளியில் இருந்து 10000 என்கிற புள்ளிக்கு ஜப்பான் சந்தை வந்து மீண்டும் 10700 என்கிற புள்ளியை கடந்துவிட்டது. ஹாங்காங் சந்தையும் அதேதான், 22500 என்கிற புள்ளியில் இருந்து 20000 என்கிற புள்ளிக்கு வந்து மீண்டும் 22500 புள்ளியை கடக்கத்தயாராக உள்ளது.
12.1.2010 இன்று – காலை 8.30 மணி அளவில் சிவப்பில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
11.1.2010 அன்று சிறிது பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.
நிப்டி இன்று 12.01.2010
முதலில் நேற்றைய பதிவு வெளியிட முடியாததற்க்கு மன்னிக்கவும்.
நிப்டி நேற்று காலையில் தொடங்கிய பிறகு 9.15 மணிக்கு பிறகு புதிய நிலையினை அடையவில்லை, அதன் பிறகு சந்தை கிழ் நோக்கியே வந்ததே ஒழிய மேலே செல்ல முனையவில்லை. இந்தமாத்தின் நிப்டி பொசிசன் எடுத்த பணமுதலைகள், உலக சந்தையின் போக்கை பார்த்து நம் சந்தையை நகர்த்த முனைகின்றனர். உலக சந்தையின் உயர்வு/தாழ்வை கடந்த 15 நாட்களாக பார்த்து இருந்திர்களானால் இதை நிங்கள் நன்றாக உணரலாம்.
இப்பொது உள்ள ஒரே கேள்வி, உலக சந்தைகளில் சேர்ப்பு நிலை முடிந்துவிட்டதா? இல்லையா என்பதே ஆகும்.....
இந்த மாத இறுதிக்குள் நிப்டி 5050 என்கிற நிலையினை தொட்டால் ஒழிய மீண்டும் சந்தை மேலே செல்ல அதாவது புதிய நிலைகளை அடைய முடியாது என்பது என்கருத்து. இல்லை என்றால் உலக சந்தைகளின் போக்கில் சென்றால் கண்டிப்பாக 5350 என்கிற நிலையினை தாண்டி நிப்டி செல்ல இயலாது... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று....
கணிணி தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும், சந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நேரத்தில் பிற பணிகள் இருப்பதாலும் இன்னும் சில நாட்களுக்கு பதிவுகள் தினமும் காலை 10 மணிக்குள் பதிவிடப்படும். இந்த சிறு சிரம நிலை சரியாகும்வரை பொறுத்தருள்க.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5250 to 5260 (starting) - 5263 - 5239 - 5218 - 5201(low) - 5211 - 5200 (close)
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி: மேலே பறக்கிறது எனவே கவனமாக நிலைகள் எடுக்கவும். சாட் பொசிசன் எடுக்கவும்.
பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.
யோசனைகளும் மாற்று கருத்துக்களும் வரவேற்க்கபடுகிறது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக