நிப்டி இன்று 8.1.2010
வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
7.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ப்ளாட்டாக முடிந்து உள்ளது. சில சந்தைகள் குறைந்தும் (.5 சதவிதம் வரை) முடிந்து உள்ளது.
8.1.2010 இன்று – காலை 8.30 மணி அளவில் ப்ளாட்டாக தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
8.1.2010 அன்று சிவப்பில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.
நிப்டி இன்று 08.01.2010
திரிசங்கு நிலை கேள்விபட்டு உள்ளிர்களா? இப்போது உள்ள நிப்டி க்ராப்பை பாருங்கள்.... அதுதான் திரிசங்கு நிலை. உலக சந்தைகளில் எற்பட்டு உள்ள சிறிய தேக்க நிலை எல்லை கடந்து இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலிக்கிறது. இந்த நிலை இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும் என்பது என் எண்ணம்.
இந்த மாதத்தின் வியாபாரம் நான்கு நாட்களே நடந்து உள்ள நிலையில் சந்தை மேலே செல்ல பல சில தயக்கங்களையும், பல எதிர்ப்பார்ப்புகளையும் கொண்டுள்ளது.
இந்த மாதத்தில் நான் கொண்டு உள்ள நிலை அல்லது வியூகம் இப்படி உள்ளது, இரண்டு விற்று ஒன்று வாங்கு. அதாவது, நிப்டி இரண்டு லாட் விற்று, ஒரு லாட் வாங்கியுள்ளேன். அதாவது 1:2 என்று வியாபாரம் செய்யவும்.
கணிணி தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும், சந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நேரத்தில் பிற பணிகள் இருப்பதாலும் இன்னும் சில நாட்களுக்கு பதிவுகள் தினமும் காலை 10 மணிக்குள் பதிவிடப்படும். இந்த சிறு சிரம நிலை சரியாகும்வரை பொறுத்தருள்க.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5250 to 5265 (starting) - 5235 - 5248 - 5226 - 5201(low) - 5217 - 5207 (close)
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி: மேலே பறக்கிறது எனவே கவனமாக நிலைகள் எடுக்கவும். சாட் பொசிசன் எடுக்கவும்.
பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.
யோசனைகளும் மாற்று கருத்துக்களும் வரவேற்க்கபடுகிறது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக