வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
18.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ப்ளாட்டகவும் அல்லது ஒரு சதவிதம் குறைந்தும் முடிந்து உள்ளது.
19.1.2010 இன்று – காலை 7.00 மணி அளவில் அனைத்தும் ப்ளாட்டாக தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
18.1.2010 அன்று அமெரிக்க சந்தை விடுமுறை.
நிப்டி இன்று 19.01.2010
முதலில் நேற்றைய பதிவு வெளியிட முடியாததற்க்கு மன்னிக்கவும்.
இந்திய சந்தைகள் மிக கலவையான ஒரு நிலையில் உள்ளது. உள்நாட்டு காரணிகள் எல்லாம் சந்தையை மேல் நோக்கி நகர்த்த முயற்சிக்கும் இந்த வேளையில் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி சந்தையை மேல் நோக்கி உயர்த்த முயலும் இந்த வேளையில்தான் உலக சந்தைகளில் ஒரு கரெக்சன் வரும் சமிஞ்சைகள் தெரிகிறது.
இந்திய சந்தைகளின் நிலைபெறும் தன்மை எல்லாமே புறகாரணிகளை நம்பி உள்ளதோ என்கிற சந்தேகம் சென்ற மாதம் வந்தது... இப்போது உலக சந்தைகள் எவ்விதத்திலும் இந்திய சந்தையை
கட்டுப்படுத்த முடியாது என்கிற ஒரு நம்பிக்கையை இந்த மாத வர்த்தகம் தருகிறது.
நான் எற்கனவே சொன்னது போல சந்தை 5100 என்கிற புள்ளியை தொட்டுவிட்டுத்தான் புதிய உச்ச நிலைகளை அடைய முடியும் என்று எண்ணுகிறேன்... பார்ப்போம்.... கிழ் நோக்கி வர ஒரு நல்ல ஸ்ட்ராங் ரீசன் வேண்டும்.... அது 29 தேதி அன்று இந்திய மத்திய வங்கி அறிவிக்கும் கடன் கொள்கைகள் நெறிமுறையின் விளைவால் கிழ் நோக்கி செல்ல தொடங்கலாம்...அதுவரை சாட் பொசிசன் மட்டும் எடுக்க தயாராக உள்ளேன்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5270 TO 5284 (starting) - 5290 - 5269 - 5254 - 5232 - 5211 (Low) - 5225 (close)
பங்கு சந்தை கொடி: மேலே பறக்கிறது.
பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக