வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
1.3.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்ந்து உள்ளது
இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
1.3.2010 - அமெரிக்க பங்கு சந்தையின் போக்கு மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அங்கும் பொருளாதார எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாமல் அதிபர் திணறுகிறார். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டில் ஆட்சிக்கு வருபவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் கடும் விமர்சனத்திற்க்கு ஆளாகவேண்டியிருக்கும்.
அதற்கு பயந்தே அதிபர் பொருளாதார மீட்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
DOWJONES புள்ளிகள் 10000 கீழே செல்லாமலும், NASDAQ புள்ளிகள் 2100-க்கு கீழே செல்லாமல் பார்த்து கொண்டது அதிபரின் சென்ற மாத உரையால்தான். பொருளாதார மீட்சி என்பது இப்போதுதான் சற்று தெளிவாக தெரிகிறது. வரும் வாரங்களில் 10300 முதல் 10500 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. 10500 என்கிற புள்ளிக்கு செல்ல இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத மத்தியில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். 1.3.2010 அன்று நன்றாக உயர்ந்துள்ளது.
நிப்டி இன்று 2.3.2010
கடந்த இரு மாதங்களாக பதிவு இட முடியாததற்க்கு மன்னிக்கவும். எவ்வளவோ கடும் பணி இருந்ததாலும் வணிக குறிப்புகள் எழுதாமல் இருந்தது இல்லை. இனி இது போல நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.
இந்திய வணிக சந்தைகள் சற்று சிரமமான நிலையில் உள்ளது. சந்தை மேல் நோக்கிசெல்ல எந்தவோரு நல்ல காரணமும் தெரியவில்லை.
சேர்ப்பு நிலையில் சந்தை உள்ளது என்பதே உண்மை. 4750 முதல் 4950 என்கிற புள்ளிக்குள் எப்போது வேண்டுமானலும் சந்தை நிலைக்கும். 4950 முதல் 5150 என்கிற நிலை கண்டிப்பாக, எப்ரல் இரண்டாம் வாரம் வரும் நிறுவனங்களின் வருட வருமானம் மற்றும் லாபங்களின் விபரங்களை கொண்டு 5180 என்கிற சூட்சம புள்ளியை அடையும். அதுவரை இந்த சந்தை உயரும் சந்தையாக கொண்டு லாங் பொசிசன் எடுக்கவும். இதுவே நான் கொண்டு உள்ள நிலையாகும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
4870 முதல் 4900 (தொடக்கம்) - 4865 - 4882 - 4899 (பிற்பகல் மூன்று மணிக்குள்) - 4888 (தினவர்த்தம் புரிவோர் தங்கள் நிலைகளை க்ளோஸ் செய்யும் போது) - 4900 (மீட்சி மற்றும் முடிவு).
நாளை முதல் பரிந்துரைகள் சொல்லும் முறையும் வேறுபடும்.
திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக